எரிபொருள் நெருக்கடியால் பேராசிரியை ஒருவர் எடுத்த அதிரடி முடிவு!

0
772

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் நெருக்கடியை அடுத்து பலர் இலவச மாற்று போக்குவரத்து முறைகளுக்கு மாறி வருகின்றனர்.

இவ்வாறான மாற்றத்தில் துவிச்சக்கரவண்டி ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் பேராசிரியை மெத்திகா விதானகே தனது போக்குவரத்துக்கு துவிச்சக்கர வண்டியை பயன்படுத்தி வருகிறார்.

எரிபொருள் நெருக்கடியால் பேராசிரியை ஒருவர் எடுத்த அதிரடி முடிவு!

இன்று முதல் தனது “பயண தோழன்” துவிச்சக்கர வண்டி தான் என தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் நிற்பதால் நேரத்தை இழப்பதைக் கருத்தில் கொண்டு தான் துவிச்சக்கர வண்டியை பயன்படுத்துவதாக அவர் தெரிவித்தார். அது தனக்கு நிறைய நேரத்தை மிச்சப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழகத்தில் வேலை செய்வதற்காக சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் துவிச்சக்கரவண்டியில் சென்றதாக பேராசிரியர் கூறினார்.

எரிபொருளை வழங்குவதற்கான முறையான வழிமுறை அறிமுகப்படுத்தப்பட்டால் மக்கள் வரிசையில் நிற்பதால் இழக்கப்படும் நேரத்தை மிச்சப்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

ஒரு மனிதனின் நேரம் மனித உழைப்பு என்பதை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது முனைவர் பட்டத்திற்காக டென்மார்க்கில் இருந்த மூன்று வருடங்களில் தனது போக்குவரத்துக்காக துவிச்சக்கர வண்டியை பயன்படுத்தியதாக அவர் கூறினார்.

பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூட நாட்டில் போக்குவரத்துக்காக மிதிவண்டிகளைப் பயன்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார். மிதிவண்டியைப் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கும் நல்லது என்று அவர் சுட்டிக்காட்டினார்.