நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் 50 லிட்டர் பெட்ரோல் திருட்டு

0
645

மீரிகம பஸ்யால வீதியின் மல்லேஹெவ சந்திக்கு அருகில் வீடொன்றில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றிலிருந்து பெற்றோல் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காரில் பொருத்தப்பட்டிருந்த பெற்றோலை குழாயை வெட்டியெடுத்து இவ்வாறு திருடியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தனிநபர் அல்லத குழுவொன்று இணைந்து காரில் பொருத்தப்பட்டிருந்த பெற்றோல் குழாயை வெட்டியுள்ளதாகவும், அப்போது அந்த காரில் சுமார் 50 லீற்றர் பெற்றோல் இருந்ததாகவும் காரின் உரிமையாளர் தெரிவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.