உலகம் முழுவதும் இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 10 கோடியாக உயர்வு!

0
607

உலகம் முழுவதும் போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 10 கோடியாக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா.அகதிகளுக்கான முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில், போர், வன்முறை, மனித உரிமை மீறல்கள், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பல பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளில் இடம்பெயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் அகதிகளாக இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது இதுவே முதல் முறை எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.