இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டும் ஜ.நா.சபை!

0
691

இலங்கைக்கு உதவி வழங்க ஐக்கிய நாடுகள் சபை முன்வந்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்துடன் தாம் பேச்சு நடத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அதிகரிக்கும் உணவுப் பற்றாக்குறை நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான சர்வதேச உதவிகளை தாம் கோரியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் மூன்று வேளையும் உணவு கிடைப்பதை உறுதி செய்வது, உடனடி முன்னுரிமை அளிக்கும் திட்டங்களில் ஒன்றாகும் என பிரதமர் மேலும் கூறியுள்ளார்.