அனுராதபுரத்தில் நகைக்கடைக்குள் ஏற்பட்ட கலவரம்!

0
794

நகைக்கடைக்குள் புகுந்து கடையில் இருந்தவர்கள் மீது மிளகாய்துாள் வீசி கொள்ளையிட முயற்சித்தவர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் அனுராதபுரத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

நகைக்கடைக்குள் புகுந்து நகை வாங்குபவர் போல் பாசாங்கு செய்து, நகைக்கடைக்குள் பார்வையிட்டு கொண்டிருக்கும்போது கடையில் இருப்பவர்கள் மீது திடீரென மிளகாய்த்தூளை வீசிவிட்டு பார்த்துக் கொண்டிருந்த நகைகளை எடுத்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளார்.

அப்போது வீதியில் நின்றவர்கள் நடந்ததை ஊகித்து, தப்பி ஓடிய திருடனை மடக்கி பிடித்து நையப்புடைத்தனர்.

பின்னர் திருடனை பொலிஸாரிடம் ஒப்படைத்ததுடன், கொள்ளையிடப்பட்ட நகையும் மீட்டிருக்கின்றனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.