புலம்பெயர் தேசங்களில் உணர்வெழுச்சியுடன் மே- 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

0
869

தமிழர் தாயகத்தைப் போன்று புலம்பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சியுடன் மே- 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

லண்டனில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு ஆகியன ஒன்றுகூடல்களையும் பேரணிகளையும் நடத்தியிருந்தன.

அதேவேளை, ஒக்ஸ்போர்ட் பகுதியிலுள்ள உலகத் தமிழர் வரலாற்று மையத்திலும் இன்று மாலை நிகழ்வுகள் நடைபெற்றன.

ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்திலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

பிரான்சில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு நீதிகோரும் பேரணியொன்று நடத்தப்பட்டது.

பாரிஸ் நகரிலுள்ள பிளாஸ்-து-லா ரிபப்லிக் எனப்படும் குடியரசு இடத்திலிருந்து ஆரம்பித்த பேரணி பிரெஞ்சுப் புரட்சி வெடித்த இடமான பெஸ்ட்டில் (Bastille) பகுதி வரை நடத்தப்பட்டது.

செவரோன் நகரத்தில் உள்ள தமிழர் தாயத்தின் தியாகங்களை வெளிப்படுத்தும் நினைவுக்கல் முன்பாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் நகர முதல்வர், மற்றும் பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளனர்.

அத்தோடு, டென்மார்க், நியூசிலாந்து, அவுஸ்ரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து, ஜேர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய இடங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.