அரச ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்படுமா..?

0
1164

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்க ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் நடைமுறை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்த நடைமுறையின் கீழ் வீட்டில் இருந்த பணியாற்றுவோருக்கான சம்பளம் குறைக்கப்படும் என பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

தற்போது அரச உத்தியோகத்தர்களை அழைப்பதை கட்டுப்படுத்த முன்வருபவர்கள் அவ்வாறான சம்பளக் குறைப்புக்கு இணங்கினால் சுற்றறிக்கை ஒன்றை வெளியிடத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட செலவில் பணிக்கு வருபவர்களுக்கும், செலவின்றி வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கும் ஒரே மாதிரியான சம்பளம் வழங்குவது நியாயமற்றது என்றும் செயலாளர் குறிப்பிட்டார்.

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அரச ஊழியர்களை பணிக்