Android Smartphoneல் இனி கால் ரெக்கார்டிங் செய்ய முடியாதா?..

0
878

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் கால் ரெக்கார்டிங் செய்யும் செயலிகள் வேலை செய்வது நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 11ஆம் திகதியில் இதை கூகுள் நிறுத்தியுள்ளது. பயனர்கள் மத்தியில் பிரபலமான TRUE காலர் செயலி, அழைப்புகளை பதிவு செய்யும் வசதியை கொடுத்து வந்தது.

இதன் மூலம் ஏராளமானோர் தமக்கு வரும் அழைப்புகளை பதிவு செய்து வந்தனர். இனி TRUE காலர் செயலியிலும், அழைப்புகளை பதிவு செய்யும் வசதி இல்லை.

அதற்கு பதிலாக ஆட்டோமெட்டிக்காக கால்களை ரெக்கார்டு செய்வது எப்படி?

ப்ளே ஸ்டோரில் இருந்து கூகுள் போன் செயலியை டவுன்லோட் செய்ய வேண்டும்.

பின்னர் செய்ய வேண்டியது போன் செயலி -> செட்டிங்ஸ் -> கால் ரெக்கார்டிங்

இப்போது Numbers not in your contacts எனபதை செலக்ட் செய்யவும்.

பின்னர் Selected numbers (தேவையான நம்பர்களிடம் இருந்து வரும் வாய்ஸ்களை ரெக்கார்ட் செய்வது) என்பதை செலக்ட் செய்யவும்.

இதற்குபிறகு Choose a contact என்பதை டேப் செய்ய வேண்டும். இதை தொட்டால் list of contacts வரும், அதில் தேவையான காண்டாக்ட்களை செலக்ட் செய்ய வேண்டும்.