உக்ரைனின் நிலைமை குறித்து கவலை தெரிவித்த ஜெலன்ஸ்கி!

0
885

உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் நிலைமை மிகவும் கடினமாக உள்ளது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy) கவலை தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு 84 நாட்களாக நடைபெற்று வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை முற்றுகையிட்டுள்ள ரஷ்யா பல்வேறு வகையான தாக்குதல்களை நடத்தி வருகிறது.

உக்ரைனும் மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவிகளை கொண்டு ரஷ்யாவிற்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் நிலைமை மிகவும் கடினமாக உள்ளதாக உக்ரைன் அதிபர் விலாடிமர் ஜெலென்ஸ்கி(Volodymyr Zelenskyy) கவலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ரஷ்யா படையெடுப்பு தொடங்கி 84 நாட்கள் ஆகும் நிலையில், இது பைத்தியகாரத்தனமாக இருந்தாலும் ரஷ்ய படைகள் இன்னும் தங்கள் முயற்சிகளை நிறுத்தவில்லை என்று அதிபர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) கண்டனம் தெரிவித்தார்.

உக்ரைனின் கருங்கடல் துறைமுகங்களை ரஷ்யா முற்றுகையிடுவது உலக பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக ஜெலென்ஸ்கி(Volodymyr Zelenskyy) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் தலைநகர் கீவை கைப்பற்ற தவறிய பின்னர் ஏப்ரல் 19 அன்று அறிவிக்கப்பட்டு, இரண்டாம் கட்ட படையெடுப்பில் ரஷ்ய படைகள் டான்பாஸ் மீது பெரும் தாக்குதலை நடத்தி வருவதாக அதிபர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்தார்.