தடம்புரண்ட எரிபொருள் போக்குவரத்து ரயில்!

0
672

எரிபொருள் போக்குவரத்து ரயில் ஒன்று இன்று காலை ரம்புக்கனை மற்றும் கடிகமுவ ரயில் நிலையங்களுக்கிடையில் தடம்புரண்டுள்ளது.

இதன் காரணமாக மலையகத்திற்கான ரயில் சேவை தாமதமடைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி நோக்கி பயணிக்கும் ரயில்கள் ரம்புக்கனை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் , பேராதனையிலிருந்து பயணிக்கும் ரயில்கள் கடிகமுவ வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. தாமதமடைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.