ஜனாதிபதிக்கு ஓமல்பே சோபித தேரர் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

0
704

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க எடுத்த தீர்மானத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

அது அரசியலமைப்புக்கு முரணான சட்டவிரோத செயற்பாடாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மக்களின் கோரிக்கைகளை செவிமடுக்காமல் தன்னிச்சையாக தீர்மானங்களை எடுத்து, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவைப் போன்று அவப் பெயருடன் இரகசியமாக வெளியேறி வாழக்கூடிய நிலைமைக்கு வழியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று ஜனாதிபதியை எச்சரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.