ரணில் பிரதமரானால் நாங்கள் இருக்க மாட்டோம்!

0
1206

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்கும் பட்டசத்தில் நியமிக்கப்படும் அமைச்சரவையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் தமக்கு நம்பிக்கை உள்ளதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய கட்சியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார கூறியுள்ளார்.

அதேவேளை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு நாட்டின் பொறுப்புக்களை பொறுப்பேற்கத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.