இலங்கை கலவரம் தொடர்பில் இந்தியா மறுப்பு!

0
695

அரசியல்வாதிகள் சிலரும் அவர்களின் குடும்பங்களும் இந்தியாவுக்கு சென்றிருப்பதாக ஊடகங்கள் சிலவற்றிலும், சமூக ஊடகங்களிலும் வதந்திகள் பரவுவதனை இந்திய உயர் ஸ்தானிகராலயம் அவதானித்துள்ளது.

இவை போலியானதும் அப்பட்டமான பொய்யானதுமான அறிக்கைகளாக உள்ளதுடன் எந்தவிதமான உண்மைகளோ அல்லது அர்த்தங்களோ இல்லாதவை என தெரிவித்துள்ளது. மேலும் இவ்வாறான செய்திகளை உயர் ஸ்தானிகராலயம் கடுமையாக மறுக்கின்றது.