சடுதியாக விலை ஏறிய மணல்!

0
613

எரிபொருள் விலையேற்றம் காரணமாக மணல் கியூப் ஒன்றின் விலை 21,000 ரூபா வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைய நாட்களில் 13,000 ரூபாவாக இருந்த ஒரு கியூப் மணலின் விலை 21,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் விலை அதிகரிப்பு, போக்குவரத்துக் கட்டணம், மணல் ஏற்றிச் செல்வதற்கான வாடகை போன்றவற்றின் காரணமாகவே மணல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.