நாளை அரச மற்றும் தனியார் பேருந்துகள் வழமைபோன்று இயங்கும்!

0
298

அரசாங்கத்துக்கு எதிராக நாளை பொது பணிப்புறக்கணிப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதும் அரச மற்றும் தனியார் பேருந்துகள் வழமைபோன்று இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அரச பேருந்துகள் உரிய சேவைகளை நடத்தும் என்று இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் தாமும் நாளையதினம் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சம்மேளனத் தலைவர் கெமுன விஜயரத்ன எமது செய்திசேவையிடம் தெரிவித்தார்.

எனினும் எதிர்வரும் 6ஆம் திகதி நடத்தப்படவுள்ள தேசிய நிர்வாக முடக்கல் போராட்டத்துக்கு தமது சங்கம் ஆதரவளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.