அமெரிக்காவில் ஒருநாள் மேயராக பதவியேற்ற பூனை!

0
507

அமெரிக்கா மிச்சிகன் மாகாணத்தில் உள்ள ஹெல் என்ற சிறிய நகரின் மேயராக பூனை ஒன்று பதவியேற்ற சம்பவம் காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பெரிய கண்களுடன் உடல் குறைபாட்டுடன் பிறந்த பூனை ஜிங்ஸ் தன் குறைபாட்டாலே சமூக வலைதளங்களில் பிரபலமானது.

இந்நிலையில் 100 டாலர் பணம் செலுத்தி ஹெல் நகரின் மேயராக யார் வேண்டுமென்றாலும் பதவி வகிக்க அந்நகர நிர்வாகம் அனுமதி அளித்தது.

இதையடுத்து ஜிங்ஸ்சின் உரிமையாளர் மியா 100 டாலர் செலுத்தி ஜிங்சை ஒருநாள் மேயராக்கினார். வெறும் 72 பேர் மட்டுமே வசிக்கும் ஹெல் நகரின் ஒரு நாள் மேயராக ஜிங்ஸ் பதவி வகித்தது. 

Gallery
Gallery