அமைச்சரவை உப பேச்சாளர்களாக இருவர் நியமனம்

0
364

அமைச்சரவையின் உப பேச்சாளர்களாக இருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் கல்வி மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண மற்றும் எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோர் அமைச்சரவையின் உப பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை ஊடகத்துறை அமைச்சர் நாலக்க கொடஹேவ உறுதிப்படுத்தியுள்ளார்.