உக்ரைனில் ரஷ்யப்படைகளின் அட்டூழியம்…. செய்தி வெளியிட்ட ஊடகவியலாளருக்கு நேர்ந்த நிலை…!!!

0
468

உக்ரைன் நாட்டில் ரஷ்ய படையினர் மக்களை கொலை செய்து குவித்து வருவதை வெளிப்படுத்திய பெண் ஊடகவியலாளரை கைவிலங்கிட்டு அழைத்துச் சென்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

உக்ரைன் நாட்டில் ரஷ்யப்படைகள் 2 மாதங்களுக்கும் மேலாக தீவிரமாக போர் தொடுத்து வருகிறது. அந்நாட்டில் மக்களை இரக்கமின்றி ரஷ்யப்படைகள் கொன்று வருவதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் அந்நாட்டின் மரியுபோல் நகரத்தில் ரஷ்ய படையினர் மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துவது குறித்து ரஷ்யாவை சேர்ந்த Maria Ponomarenko என்ற பெண் ஊடகவியலாளர் செய்தி வெளியிட்டிருக்கிறார். ஆனால் அவர் போலியாக செய்திகளை பரப்புகிறார் என்று குற்றம் சாட்டி அவரை ரஷ்ய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நாளை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருக்கிறார். தற்போது அவர் காவலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.