நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை கருத்திற் கொண்டு காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் நேற்று 16வது தினமாக இடம்பெற்றுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு மத்தியில் புகுந்த திருடன் ஒருவரை இளைஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
குறித்த இளைஞர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் தங்க நகைகள், பணம், கையடக்க தொலைபேசி போன்ற பெறுமதியான பொருட்களை திருடுவதாக தெரியவந்துள்ளது.
இதனை அவதானித்த இளைஞர்கள் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இளைஞர்களை கண்டுபிடித்து அவரை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பொலிஸார் அந்த இளைஞனை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.