அதிபருக்கு எதிராக ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர் பேரணி!!

0
511

அர்ஜெண்டினாவில் அதிபருக்கு எதிராக திரண்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள், டிராக்டர் பேரணியில் ஈடுபட்டு நகரையே ஸ்தம்பிக்கச் செய்தனர்.

நாட்டில் பண வீக்கத்தை கட்டுப்படுத்த விவசாய பொருட்களின் விலை நிர்ணயங்களில் தலையீடும் அதிபர் அல்பெர்டோ பெர்னாண்டஸ்சின்(Alberto Fernandez) கொள்ளை விவசாயத்துறைக்கு எதிரானது என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தலைநகர் பியுனஸ் ஏர்ஸ் சாலையில் உள்ள அதிபர் மாளிகை பகுதியில் டிராக்டர் பேரணி நடத்தினர்.

மேலும் வரி விதிப்பு குறித்த அல்பெர்டோ பெர்னாண்டஸ்சின்(Alberto Fernandez) முடிவை திரும்பப் பெறக்கோரி ஆயிரக்கணக்கான விவசாயிகள் சாலையில் கொடிகளுடன் சென்று மெகா பேரணியில் ஈடுபட்டுனர்.

Gallery
Gallery