ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகள் மூவர் இடமாற்றம்!

0
465

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகள் மூவர் உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, ரம்புக்கனை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி, ரம்புக்கனை பொலிஸ் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் கேகாலை வலயத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.