பரீட்சைகள் தொடர்பில் வெளியான தகவல்

0
457

ஏற்கனவே திட்டமிட்டபடி மே மாதம் 23ஆம் திகதி முதல் ஜூன் 1ஆம் திகதி வரை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இடம்பெறும் என கல்வி அமைச்சர் ரமேஷ் பத்திரன (Ramesh Pathirana) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான அறிவிப்பை அவர் இன்று வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, 2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதி முதல் நவம்பர் 12ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது எனவும், இவ்வாண்டுக்கான தரம் 5 இற்கான புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 16ஆம் திகதி இடம்பெறும் எனவும் கல்வி அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.