“எனக்கு பணம் தேவையில்லை நீதியே வேண்டும் என உருக்கம்!” ரம்புக்கனை சம்பவத்தில் உயிரிழந்தவரின் மகள்

0
529

தனது தந்தையின் சார்பாக அனைத்து தரப்பினரிடமிருந்தும் நீதியை எதிர்பார்ப்பதாக பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிந்தவரின் மகள் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

முதன்முறையாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அந்த நபரின் மகள் எனக்கு நிதியுதவி தேவையில்லை என்றும் இந்த சம்பவத்திற்கு நீதி வேண்டும் என்றும் அழுது கூறினார்.

ரம்புக்கனையைச் சேர்ந்த 42 வயதுடைய கே.டி.லக்க்ஷான் என்பவர் நேற்று ரம்புக்கனையில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.