தலவாக்கலையில் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டம்!

0
605

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மகிந்த ராஜபக்சவும் உள்ளடங்கலான அரசாங்கம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தலவாக்கலை நகரில் இன்று பாரியதொரு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது றம்புக்கனையில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதலுக்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.