இலங்கையில் பாரிய அளவில் அதிகரித்து; உலக சந்தையில் குறைந்த எரிபொருள்

0
498

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி பிரென்ட் கச்சா எண்ணெய் (Brent crude oil) பரல் ஒன்றின் விலை இன்று (19) 111.5 அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது.

இது முந்தைய நாளை விட 1.43 சதவீதம் குறைந்துள்ளது.

அதேபோன்று WTI கச்சா எண்ணெயின் ஒரு பீப்பாய் விலை முந்தைய நாளை விட 1.67 சதவீதம் குறைந்து 106.4 அமெரிக்க டொலர்களாக இருந்தது.

உலக சந்தையில் கச்சாய் எண்ணெய் விலை குறைந்த நிலையில் இலங்கையில் எரிபொருள் விலை பாரியளவில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.