இலங்கை பொலிஸார் வெட்கப்பட வேண்டும்: சீற்றமடைந்த மஹேல

0
713

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் இலங்கை பொலிஸார் வெட்கப்பட வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார். 

ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தினை கடுமையாக சாடியுள்ள மஹேல  இதுதான் ஜனநாயகமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ளார்.

 மக்கள் வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் சொத்துக்களை சேதப்படுத்தினால் அவர்களை கைது செய்யலாம், ஆனால் அவர்களை சுடுவதற்கு எந்த காரணமும் இல்லை.

இது ஜனநாயகமா? இதுதான் நாட்டின் சட்டமா? இதற்கு காரணமானவர்கள் யார் என்றாலும் அவர்களை நீதியின் முன் நிறுத்தவேண்டும். இலங்கை பொலிஸாரே நீங்கள் வெட்கப்படவேண்டும்