பதவி விலகப் போவதில்லை: பிரதமர் மகிந்த ராஜபக்ச கடும் மனவேதனை

0
554

ஒவ்வொருவரினதும் கோரிக்கைக்காக பதவி விலகப் போவதில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் தொடர்பில் தெற்கு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியில் அங்கம் வகித்த சில அமைச்சர்கள் கூட விலகி இன்று விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த விடயம் தொடர்பில் கடும் மனவேதனை அடைந்துள்ளேன்.

பதவிகளை விட்டு விலகாது தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்