அரசாங்கத்திற்கு எதிராக அனுஷ்டிக்கப்படவுள்ள தேசிய கறுப்பு தினம்

0
499

அரசாங்கத்திற்கு எதிராக வருகின்ற 20ஆம் திகதி தேசிய எதிர்ப்பு தினமாக அனுஷ்டிப்பதற்கு  பிரதான தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

கோட்டாகோகம சர்வதேச ஊடக மையத்தில் இன்று(18) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிடுகையில், 

வருகின்ற 20ஆம் திகதி தேசிய எதிர்ப்பு தினமாக அனுஷ்டித்து  நாடு முழுவதும் உள்ள அனைத்து ஊழியர்களும் கறுப்பு துணி அணிந்து, நாடு முழுவதும் கறுப்பு கொடிகளை கட்டவேண்டும்.

புகையிரத திணைக்களம், தபால் அலுவலகம், துறைமுகங்கள், கல்வி உட்பட அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகள் இந்த எதிர்ப்புத் தினத்திற்கு ஆதரவளித்துள்ளது.

28ஆம் திகதி  நாடு தழுவிய அடையாள வேலை நிறுத்தம், கோட்டாபய மற்றும் ராஜபக்ச குடும்பம் வெளியேற வேண்டும் என தெரிவித்துள்ளார்.