போராட்டத்தில் கலந்துகொள்ள இங்கிலாந்திலிருந்து வந்த இலங்கைப் பிரபலம்!

0
684

சமீபத்தில் 2022 ஒலிவியர் விருதுகளில் சிறந்த நடிகருக்கான விருதை வென்ற இங்கிலாந்தைச் சேர்ந்த இலங்கை நடிகர் ஹிரன் அபேசேகர இன்று நாட்டை வந்தடைந்தார்.

இந்நிலையில் கொழும்பில் காலி முகத்திடல் நடைபெற்று வரும் அமைதியான பொதுப் போராட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக நடிகர் ஹிரன் அபேசேகர தெரிவித்துள்ளார்.

அதேவேளை 2022 ஆம் ஆண்டுக்கான ஒலிவர் விருது வழங்கலில் சிறந்த நடிகருக்கான விருதை ‘லைஃப் ஆஃப் பை’ (Life of Pi) நாடகத் தழுவலுக்காக ஹிரன் அபேசேகர பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Gallery