யாழ் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் காயம்

0
769

இரு குழுக்களுக்கிடையில் உருவான வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் காயமடைந்த இருவர் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் கடந்த 15ம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,

சாவகச்சோி நகர் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருக்கின்றது.

அது பின்னர் மோதலாக மாறிய நிலையில் போத்தலை உடைத்து குத்தியதில் இருவர் காயமடைந்த நிலையில் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.