நாட்டின் தேசிய கீதத்தை அரசுக்கு ஞாபகப்படுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள்

0
432

அரசியல் கட்சிகளின் தலையீடுகள் இன்றி, ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படும் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் இன்று 9ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கொழும்பு காலிமுகத்திடலுக்கு வருகை தந்து பொதுமக்கள் இந்த போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கி வருகின்றனர்.

ஜனாதிபதியை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த நிலையில் நேற்றைய தினம் விண்ணதிரும் அளவிற்கு, போராட்டக்காரர்கள் இணைந்து தேசிய கீதம் இசைத்துள்ளனர்.