இந்தியாவிடம் மீண்டும் கடனுதவி திட்டம்!

0
690

இந்தியாவின் கடனுதவித் திட்டத்தை மேலும் அதிகரித்துக்கொள்வதற்கான கலந்துரையாடல்கள் தற்போது நடைபெற்று வருவதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிக்கின்றார்.

இதேவேளை, 18 முதல் 23ம் திகதி வரையான காலப் பகுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறுகின்றார்.

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல்களை நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.