அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த பிரபல பாடகர் மரணம்

0
509

அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த பிரபல ராப் இசை பாடகர் ஷிராஸ் இன்று காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (12) அதிகாலை காலி முகத்திடலில் உள்ள அரசாங்க எதிர்ப்புப் போராட்ட களத்தில் கூட்டத்தினருக்காக பாடலைப் பாடிக்கொண்டிருந்த அவர் சிறிது நேரம் கழித்து மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் உயிரிழப்பிற்கான காரணம் மாரடைப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.