பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள எதிர்ப்புப் பேரணி!

0
479

 தற்போதைய நிலைமைக்கு எதிராக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள எதிர்ப்புப் பேரணியானது பத்தரமுல்ல பொல்துவ சந்தியை நோக்கி பேரணியாகச் சென்றுள்ளது.

குறித்த பேரணி சற்று நேரத்திற்கு முன்னர் பொரளை சந்தியை கடந்தள்ளது. இன்று பிற்பகல் களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இந்த எதிர்ப்பு பேரணி ஆரம்பிக்கப்பட்டதுடன், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்கு சம்மேளனமும் இதில் கலந்துகொண்டுள்ளது.

தற்போதைய நெருக்கடிக்கு எதிராக கடந்த சில நாட்களாக பல்கலைக்கழக மாணவர்கள் பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் கண்டி நகர மையத்தில் நேற்று இரவும் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.