இலங்கை மின்சார சபை பணியாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கை

0
513

இலங்கை மின்சார சபை பணியாளர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தின் வினைத் திறனற்ற தன்மைக்கு எதிர்ப்பை வெளியிடுவதாக இலங்கை மின்சாரசபை தொழிலாளர் ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு இடையறாது மின்சார விநியோகத்தை வழங்க வேண்டுமென கோரி இந்த தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

நாட்டின் அனைத்து மின்சார சபை கிளைகளிலும் இந்தப் போராட்டம் இன்று நண்பகல் நடைபெறவுள்ளது.