ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீட்டின் முன் ஒருவர் தற்கொலை!

0
681

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீட்டின் முன்னால் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாகவே 55 வயதுடைய ஆண் ஒருவர் சற்று முன்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மின்வெட்டை உடனடியாக நிறுத்தக் கோரி, அந்த நபர் மின்மாற்றியில் ஏறியதாகவும் பின்னர் கீழே விழுந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் நடந்த போது தற்கொலை செய்துக்கொண்ட நபர் மதுபோதையில் இருந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.