12 இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!

0
405

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே இந்திய கடற்தொழிலாளர்கள் கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த 12 கடற்தொழிலாளர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களை மயிலிட்டி அழைத்து வந்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.