இலங்கை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கு கை கோர்ப்போம்: இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு

0
580

இலங்கை எதிர்நோக்கியுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கு அசுர வேகத்தில் செயற்பட வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் (S.Jaisankar) தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில், 

இலங்கையின் தற்போதைய நெருக்கடியிலிருந்து மீண்டு வர, உரிய காலத்திற்குள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தற்போது காணப்படும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கை மந்த கதியிலேயே செயற்படுகின்றது.

அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக அண்மையில் பெற்றுக்கொடுக்கப்பட்ட ஒரு பில்லியன் டொலர் இந்திய கடன் வசதியை உடனடியாக செயற்படுத்தப்படுகின்றது.