க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்!

0
483

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த வருடத்திற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஆகஸ்ட் மாதத்திலேயே நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் எதிர்வரும் காலங்களில் திட்டமிட்ட பரீட்சைகளை, திட்டமிட்டவாறே நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.