மின்கட்டணங்கள் செலுத்தாதவர்களின் வீடுகளுக்கு மின் தடை! – இலங்கை மின்சார சபை

0
486

பல மாதங்களாக மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தாத வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கான மின்சாரத்தை துண்டிக்க இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய, மின்கட்டணத்தை செலுத்தாத வீடுகளின் பட்டியலை சேகரித்து அந்த நபர்களின் மின்சார இணைப்புகளை துண்டிக்கும் பணிகளை இலங்கை மின்சார சபை ஆரம்பித்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள பல வீடுகளில் இன்று மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்று காரணமாக சில வாடிக்கையாளர்கள் பல மாதங்களாக கட்டணம் செலுத்தவில்லை எனவும், அவர்களுக்கு சில காலம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கை மின்சார சபை கடும் நிதி நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும், நிலுவைத் தொகையான மின்சார கட்டணத்தை மீளப் பெற வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.