தளபதி விஜய்யை இயக்குவது ஒரு Legacy ! – தளபதி 66 இயக்குனர் அதிரடி..

0
406

எதிர்பார்ப்பில் பீஸ்ட்  

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் நடிப்பில் அடுத்து பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

அனைவரும் எதிர்பார்த்து வரும் பீஸ்ட் படத்தின் டீசர் கூட இன்னும் வெளியாகாமல் இருந்து வருகிறது. இதனிடையே இன்று இயக்குனர் நெல்சன் பீஸ்ட் படத்தின் டீசர் குறித்த அப்டேட் நாளை வெளியாகும் என அறிவித்துள்ளார்.   

மேலும் பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தளபதி 66 படத்தில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அப்படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் முதல் வாரமே தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி குறித்து வம்சி 

இந்நிலையில் தற்போது தளபதி 66 பட இயக்குனர் வம்சி விஜய் தேவரகொண்டாவின் JGM படத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்டுள்ளார். அப்போது வம்சியிடம் விஜய் மற்றும் விஜய் தேவரகொண்டாவுடன் பணியாற்றுவது கேள்வி கேட்டுள்ளனர்.  

அதற்கு பதிலளித்த வம்சி ” விஜய் தேவரகொண்டாவுடன் பணியாற்றுவது சகோதரருடன் பணிபுரிவது போல் இருக்கும், அதே விஜய் சாருடன் பணியாற்றுவது பெரிய legacy-உடைய சூப்பர் ஸ்டாருடன் பணியாற்றுவது போல தான்.