இந்தியா வழங்கிய கடனுதவிக்கு நன்றி தெரிவித்த கோட்டாபய!

0
437

இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர், இன்று இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது ,இந்தியா இலங்கைக்கு எரிபொருள், மருந்து உட்பட அத்தியவசிய பொருட்களை கொள்வனலு செய்ய வழங்கியுள்ள கடனுதவிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அமைச்சர் ஜெய்சங்கரிடம் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு ஜனாதிபதி மாளிகையில் நடந்துள்ளது. சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்டோரும் கலந்துக்கொண்டனர்.