ரணிலை பிரதமராக்குவதற்கு பொதுஜன பெரமுனவில் மூளைக் கோளாறுள்ளவர்கள் இல்லை!

0
407

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்கும் எவ்வித தயார் நிலையும் இல்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க

பிரதமர் பதவியை வகிக்க தகுதியான நபர் தற்போது அந்த பதவியை வகித்து வருகிறார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவி மற்றும் தேசிய அரசாங்கம் தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் இன்று நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பின் போதே கருத்து வெளியிடப்பட்டது.

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்கும் அளவுக்கு மூளை கோளாறு கொண்ட எவரும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இல்லை என நினைப்பதாக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.