பண்டாரவளை – தியத்தலாவை வாகன விபத்தில் 17 வயதான யுவதியொருவர் பலி

0
418

பண்டாரவளை – தியத்தலாவை பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் 17 வயதான யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.

தியத்தலாவையிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த உந்துருளியொன்று எதிரே வந்த நோயாளர் காவு வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் உந்துருளியை செலுத்திச் சென்ற நபரும், உடன் பயணித்த யுவதியொருவரும் காயமடைந்த நிலையில் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த யுவதி ஊவாபரணகம, லூனுவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதான ஒருவரெனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் நோயாளர் காவு வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தியத்தலாவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.