Csk அணியின் கெப்டன் மஹேந்திர சிங் டோனி பதவியில் இருந்து விலகினார்!

0
655

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியுள்ளதாக அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது.

2022 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நெட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தியாக தோனி சென்னை அணி கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்துவிட்டதாக தெரியவந்துள்ளது.

அதே சமயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரராக தோனி தொடர்வார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.