வாகன இறக்குமதிக்கான அனுமதி தொடர்பில் வெளியான தகவல்

0
487

இலங்கையில் டொலர் நெருக்கடி தீர்ந்த பின்னரே வாகனங்கள் மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்கள் என்பவற்றை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில் மற்றும் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், வாகன இறக்குமதி தொடர்பில் பல யோசனைகள் முன்வைக்கப்பட்டன.எனினும் அத்தியாவசியப் பொருட்களை மாத்திரம் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருகிறது. இந்த நிலையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் இதுவரை அனுமதி வழங்கவில்லை.

டொலர் நெருக்கடி தீர்ந்த பின்னரே வாகனங்கள் மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என கூறியுள்ளார்.