லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்- டிலான் பெரேரா தெரிவிப்பு!

0
538

லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்  டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எரிவாயு வழங்கும் செயற்பாடுகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படாவிட்டால், சம்பந்தப்பட்டவர்கள் பதவியில் நீடிப்பது பலனளிக்காது.

சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோரி முன்மொழிந்த முதல் நபர்களில் தாம் ஒருவர் எனவும் அவர் தெரிவித்தார்.

கருத்து மோதல்கள் ஏற்படும் போது எரிசக்தி மற்றும் மின்துறை அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றுவதற்கு தான் முன்மொழிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

தாம் ‘வியத் மக’வின் உறுப்பினராக இல்லாவிட்டாலும், அனுபவமிக்க மற்றும் முக்கியமான அரசியல்வாதி என்ற ரீதியில், தனது முன்மொழிவுகளுக்கு இணங்கினால் அரசாங்கம் முன்னேற்றமடைய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போது எரிபொருள், எரிவாயு மற்றும் பால்மா உட்பட ஏனைய அனைத்து தட்டுப்பாடுகளுக்கும் டொலர் தட்டுப்பாடு மூல காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.இந்தப் பொருட்களை கொண்டு வரும் கப்பல்கள் துறைமுகத்தை வந்தடைகின்றன எனினும் உரிய நேரத்தில் பணம் செலுத்தப்படுவதில்லை. இந்த தாமதம் குறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் கவனிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.