உக்ரைன் ஜனாதிபதியும் ரஷ்ய தலைவரும் சந்திக்க வாய்ப்பு: துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு

0
433

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து வரும் நிலையில், புடின்-ஜெலன்ஸ்கி சந்திப்புக்கான சாத்தியம் குறித்து துருக்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

உக்ரைன் மேற்கு நகரமான Lviv-வில் Mevlüt Çavuşoğlu உடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த உக்ரைன் வெளியுறவுத்துறை Dmytro Kuleba கூறியதாவது, புடினுக்கும் ஜெலன்ஸ்கிக்கும் இடையே ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்வதில் தங்கள் முயற்சிகளை முன்னெடுக்க ஒப்புக்கொண்டதாக கூறினார்.

அதேவேளை, இரு நாடுகளுக்கு இடையேயான மோதலைத் தீர்ப்பதற்கான நிபந்தனைகள் எட்டப்பட்டால், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியும் ரஷ்ய தலைவர் புடினும் சந்திக்க முடியும் என்று துருக்கியின் வெளியுறவுத்துறை அமைச்சர் Mevlüt Çavuşoğlu கூறினார்.

பிரச்சினைகள் தொடர்பாக உடன்பாடு ஏற்படுமானால் இரு தலைவர்களும் சந்திக்கும் வாய்ப்பு உள்ளது, இதை நாங்கள் நல்லிணக்கமாக பார்க்கிறோம்.

தலைவர்கள் மட்டத்திலான சந்திப்புக்கான அடிப்படை வேலைகளை விரைவில் தயாரிப்பது அவசியம்.

புடினுக்கும் ஜெலன்ஸ்கிக்கும் இடையேயான சந்திப்பை நடத்த நாங்கள் மகிழ்சசி அடைவோம். இதற்காக நாங்கள் அமைப்பாளராக செயல்படத் தயாராக உள்ளோம் என்று ஏற்கனவே அறிவித்துவிட்டோம் என Mevlüt Çavuşoğlu கூறினார்.

ரஷ்யா-உக்ரைன் இடையேயான எந்த ஒரு சமாதான ஒப்பந்தத்திற்கும் உத்தரவாதம் அளிக்கும் நாடுகளில் ஒன்றாக துருக்கி இருக்கும் என்று தான் நம்புவதாகக் Kuleba, Çavuşoğlu-விடம் கூறினார்.