இலங்கை வந்த சுற்றுலா பயணி,ரயிலில் இருந்து தவறி வீழ்ந்து உயிரிழப்பு!

0
479

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணி ஒருவர், பயணித்த ரயிலில் இருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எகிப்து நாட்டைச் சேர்ந்த மொஹமட் அப்துல் ஹமிட் (32) என்பவரே உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த உடரட்ட மெனிக்கே புகையிரதத்தில் பயணித்த சுற்றுலாப் பயணி பட்டிப்பொல தொடருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று (16) பிற்பகல் தவறி கீழே வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில், நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

ஒரு வாரத்திற்கு முன்னர் இலங்கை வந்த அவர், எல்ல நோக்கி தொடருந்தில் பயணித்துக்கொண்டிருந்த போது பட்டிப்பொல தொடருந்து நிலையத்துக்கு அருகில் மிதிபலகையிலிருந்து தவறி வீழ்ந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.