சடுதியாக உயர்ந்தது பேருந்து கட்டணம் !

0
445

இலங்கையில் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துக்கு சபை பேருந்துகளுக்கான கட்டணம் 15 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய குறைந்தபட்ச பஸ் கட்டணம் 17 ரூபாவில் இருந்து 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கான போக்குவரத்து அமைச்சரின் யோசனைக்கு நேற்று அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நவீன சொகுசு, அரை சொகுசு, விரைவுச் சாலைகள் உட்பட அனைத்து பேருந்துகளுக்கும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. புதிய பஸ் கட்டண அறிவிப்பு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இன்று வெளியிடப்படவுள்ளது.

எதிர்வரும் காலங்களில் இந்த கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.